ரகசியமானவள்

உன்னைத் தவிர ஒருத்தியும் இங்கே
அழகாய்த் தோன்றவில்லை - என்
கண்ணுக்கேதும் நேர்ந்துவிட்டதா ?
காரணம் புரியவில்லை.

கத்திமூக்குக் காரிகளெல்லாம்
கடந்து போனார்கள். - சிலர்
குத்திக் கிழிக்கு மார்புகளாலே
கொல்லப் பார்த்தார்கள்.

வெள்ளைத் தோலைப் பார்த்தும் கூட
விழுந்து விடவில்லை. - உன்
பிள்ளைச்சிரிப்பைப் பார்த்தபின்னாலே
பிரிய மனமில்லை.

என்ன இருக்கு உன்னிடமென்று
எண்ணிப் பார்த்துவிட்டேன். - அட
இன்னும் கூட எனக்குத் தெளிவாய்
விடைகள் கிடைக்கவில்லை.

ஆயிரம் முறை நான் படித்தும் கூட
அர்த்தம் புரியாத - புதுக்
கவிதை நீ எனச் சொன்னால் அதிலே
தவறே இல்லையடி.

ரகசியமான பெண் நீ என்று
உணர்ந்தவன் நானம்மா . . ! - உன்
ரகசியத்தை ரகசியமாக
வைத்துக் கொள்ளம்மா . . .!

To view the video of this poem please CLICK HEAR
  
أحدث أقدم